உள்நாடு

சீன உரத்தை மீள் பரிசோதனை செய்வது சட்டவிரோதமானது

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய சீன உரத்தை, மூன்றாம் தரப்பு மூலம் மீளவும் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்துவது, சட்டவிரோதமானது என விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த உரத்தை மூன்றாம் தரப்பின் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் பின்னர் அதனை மீளப் பெற்றுக்கொள்ளத் தயாரில்லையென அமைச்சின் செயலாளரான சிரேஷ்ட பேராசிரியர் உதித் கே ஜயசிங்க தெரிவித்தார்.

நாட்டின் சட்டத்திற்கு அமையக் குறித்த உரத்தை மீளவும் நாட்டுக்குக் கொண்டு வர முடியாது.

அத்துடன் அதனை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மூன்று STF முகாம்கள் முடக்கம்

மீண்டும் பணிப்புறக்கணிப்பு

சர்வகட்சி மாநாடு அரசுக்கு ஆதரவளிக்கவல்ல