உலகம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தெரிந்தோ, தெரியாமலோ மோதல் இருக்கக் கூடாது

(UTV | வொஷிங்டன்) – அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டிகள் இருக்கலாம் ஆனால் அது தெரிந்தோ, தெரியாமலோ மோதலாக மாறிவிடக் கூடாது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் காணொளி வாயிலாக சந்தித்தனர். நேற்று(15) நடந்த இந்த சந்திப்பு சர்வதேச ஊடக கவனத்தினை பெற்றுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் இரண்டாவது முறையாக சீன ஜனாதிபதியுடன் காணொளி சந்திப்பு நடந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்த்து வருகிறார். அதனாலேயே இரண்டாவது முறையாகவும், இந்த சந்திப்பு காணொளியில் நடந்துள்ளது.

சந்திப்பின்போது பைடன், “நமது நாடுகளுக்கு இடையே போட்டிகள் இருக்கலாம். ஆனால், இது ஒருபோதும் தெரிந்தோ, தெரியாமலோ மோதலாக மாறிவிடக் கூடாது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நாம் வெளிப்படையாக விவாதம் நடத்திக் கொள்ளலாம்” என்று கூறினார்.

அதேபோல், எனது பழைய நண்பர் பைடன் என்று உரையைத் தொடங்கிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், “அமெரிக்கா, சீனா என இரு பெரும் வல்லரசுகளுக்கும் இடையே இன்னும் சிறப்பான தொடர்பு நிலை உருவாக வேண்டும். சீனாவும், அமெரிக்காவும் தங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் மேம்படுத்த வேண்டும்” என்றார்.

Related posts

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ‘ஜோ பைடன்’

ஒமைக்ரொனின் தீவிரம் குறித்து WHO எச்சரிக்கை

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா