உள்நாடு

போராட்டத்தை தடுக்க புதிய சோதனைச் சாவடிகள் – ஐ.ம.ச அதிருப்தி

(UTV | கொழும்பு) – நாட்டின் பல பாகங்களில் புதிய ​சோதனைச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளமையை இட்டு ஐக்கிய மக்கள் சக்தி அதிருப்தி அடைந்துள்ளது.

கொழும்பில் இன்று (16) எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட இருந்த நிலையிலேயே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு அவசரமாக, புதிதாக சோதனைச் சாவடிகள் அமைப்பதற்கான தேசிய அச்சுறுத்தல்தான் என்னவென ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்நிலையில், கொழும்புக்கு வரும் தனியார் பஸ்கள் அனைத்தும், சோதனைச் சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

அவ்வாறான சோதனைச் சாவடிகளில் பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு நன்றி

பாராளுமன்ற மோதல் விவகாரம் – இறுதி தீர்மானம் இன்று.

வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா தொற்று இல்லை