(UTV | கொழும்பு) – 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதம் இன்று (16) இடம்பெறுகிறது.
இந்நிலையில் நேற்றைய அமர்வில் கருத்துரைத்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மலையகத்திற்கான ஒதுக்கீடுகள் குறைவாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன் நாவலப்பிட்டி முதல் பத்தனை வரையிலான வீதி புனரமைக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குறித்த வீதி தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு அதனைப் புனரமைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இந்தப் பாதீட்டில் உள்வாங்கப்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.