விளையாட்டு

கிண்ணம் நமக்கு உறுதி : ஆரோன்பிஞ்ச்

(UTV |  துபாய்) – 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா – வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இது தொடர்பில் ஆஸ்திரேலிய கெப்டன் ஆரோன்பிஞ்ச் அளித்த பேட்டியில்;

“.. 20 ஓவர் உலக கிண்ணத்தில் சாம்பியன் அணியை நாணய சுழற்சி முடிவு செய்யாது. நாணய சுழற்சியால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்ளலாம். உலக கிண்ணத்தில் வெல்ல வேண்டுமானால் முதலில் துடுப்பாடி ஜெயிக்க வேண்டும்.

பாகிஸ்தானுக்கு எதிராக நாணய சுழற்சியில் தோற்கவேண்டும் என எண்ணினேன். அரை இறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பாடி ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்று கருதினேன்.

நாணய சுழற்சியில் வென்றால் முதலில் துடுப்பாட மாட்டோம். அதே சமயம் முதலில் துடுப்பாட நேர்ந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை என இருந்தேன். இதேதான் இறுதிப்போட்டியிலும் எனது நிலையாகும்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பாட செய்து சென்னை அணி கிண்ணத்தினை வென்றதை பார்த்தோம். முதலில் துடுப்பாட செய்து அதிக ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

அதிக ஓட்டங்களை குவித்தால் எதிரணி துடுப்பாடும் போது தவறுகளை செய்ய தூண்டமுடியும். 20 ஓவர் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டவே அணிகள் விருப்பப்படும். இதில் சில ஆபத்துகளும் உண்டு.

எதிரணி அதிக ஓட்டங்களை குவித்துவிட்டால் இலக்கை எடுப்பது கடினம். நியூசிலாந்தை வெல்வது சவாலாக இருக்கும்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

புதிய தலைவராக டொம் லதம்

“கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்து” ரெய்னா ஓய்வு

அர்ஜுன தலைமையில் இலங்கை கிரிக்கெட்டுக்கான இடைக்காலக் குழு – ரொஷான் ரணசிங்க