உள்நாடு

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலுத் திட்ட 2ம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

(UTV | கொழும்பு) – அடுத்த வருடத்திற்கான வரவு செலுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று(13) ஆரம்பமாகவுள்ளது.

இதற்காக நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30க்கு கூடவுள்ளது.

வரவு செலுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 தினங்களுக்கு இடம்பெறவுள்ள நிலையில், எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

அதேநேரம் வரவு செலுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், அதன் மீதான விவாதம் 16 நாட்களுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து, டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு 3 ஆம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

வேட்பாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள ஆலோசனை