உள்நாடு

உண்மை நிரூபிக்கப்பட்டால், நாடாளுமன்ற உறுப்புாிமையை விட்டுவிலக தயார்

(UTV | கொழும்பு) – தாம், மூன்று வீடுகளை ஒன்றிணைத்து அதில் வசித்து வருவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தாம் நாடாளுமன்ற உறுப்புாிமையை விட்டுவிலக முடியும் என்று மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமைச்சா் மஹிந்தாநந்த அளுத்கமகே, அண்மையில் சுமத்தியிருந்த குற்றச்சாட்டு தொடா்பிலேயே மைத்திரிபால சிறிசேன, தமது பதிலை வழங்கினார்.

இந்தநிலையில், நாட்டின் ஜனாதிபதி ஒருவா் ஓய்வு பெற்ற பின்னா், அவருக்கு அமைச்சா் ஒருவருக்குாிய வசதிகள் செய்துகொடுக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் தாம், இன்று வசிப்பது, அமைச்சா் கெஹேலிய ரம்புக்வெல்ல வசித்த வீடாகும் என்றும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Related posts

மீண்டும் இலங்கையில் நிலநடுக்கம்

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிரதமரிடமிருந்து ஒரு செய்தி

சிலாபம் நகர சபை தலைவர் கைது