விளையாட்டு

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நியூசிலாந்து

(UTV | அபூதாபி) –  இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக மொயின் அலி 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் ஜேம்ஸ் நீஷம் 18 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

இந்நிலையில், 167 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக டேரில் மிட்செல் 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் லியாம் லிவிங்ஸ்டன் 22 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதன்படி, நியூசிலாந்து அணி இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Related posts

ஒலிம்பிக் போட்டியில் வெளிநாட்டு ரசிகர்களுக்கு தடை

இறுதி இருபதுக்கு-20 போட்டி இன்று

அவுஸ்திரேலிய சென்ற ஏஞ்சலோ மேத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்