(UTV | கொழும்பு) – மக்கள் வரத்திற்கு மதிப்பளித்து நாட்டுக்கு பொருத்தமான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை இவ்வருட இறுதிக்குள் முன்னெடுக்க முடியுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இன்று முற்பகல் பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கென பாராளுமன்றத்தில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், இந்நிலையில் நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் அனுதாபங்களை தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்படுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.