உள்நாடு

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்

(UTV | கொழும்பு) – விஞ்ஞான ரீதியான பரிசோதனை முடிவுகளை மீறி, சோதனை முடிவுகளைத் தவறாகக் குறிப்பிட்டமை மற்றும் பொய்யான சோதனை முடிவைக்கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்தமை என்பவற்றுக்காக, விவசாய அமைச்சின் கீழுள்ள தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையிடமிருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலரை நஷ்டஈடாக கோரி சர்ச்சைக்குரிய சீன உர நிறுவனம் சட்ட கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தேசிய தாவரத் தடுப்புக் காப்பு சேவையின் அலட்சியத்தினாலும், தவறான அறிக்கைகள் காரணமாகவும் தமக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சீனாவின் சீன கிண்டாவோ சீவிங் பயோடெக் குழுமம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட, ஹிப்போ ஸ்பிரிட் (Hippo spirit) கப்பலில் உள்ள சேதன உரத்தில் அர்வீனியா எனப்படும் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் இல்லை என்றும், அதில் அதிக பாதுகாப்பான மற்றும் அதிக திறன் கொண்ட சேதன உரமே இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்படி கடிதம் கிடைத்த மூன்று நாட்களுக்குள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

“சுடச் சொன்னது யார் என்று இன்னும் சொல்லவில்லை”

இலங்கையின் இரண்டாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்

மினுவாங்கொடை பொலிஸ் நிலைய சேவைகள் மீள ஆரம்பம்