உள்நாடு

நாடளாவிய ரீதியாக பலத்த மழை

(UTV | கொழும்பு) – மேல், சப்ரகமுவ, மத்திய, வட மேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறித்த பிரதேசங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Related posts

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

மரக்கறி, பழங்களை இலவசமாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

கிளைபோசெட் மீதான இறக்குமதித் தடை நீக்கம்