உள்நாடு

அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக ‘மின்சார சபை தொழிற்சங்க போராட்டம்’

(UTV | கொழும்பு) – தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிராகப் பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து விரைவில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாகக் கனிய எண்ணெய், துறைமுகங்கள் மற்றும் மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் பிற தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகாரசபை, இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.

Related posts

அபுதாலிப் ஹாஜியார் குடும்பம் 40 வருடங்களின் பின் ” மீண்டும் கிராமத்திற்கு ” சென்ற நெகிழ்ச்சியான நிகழ்வு!

மின்சாரத்தை இறக்குமதி செய்வதற்கான முன்மொழிவு

கடந்த 24 மணித்தியாலத்தில் 25 பேர் கைது