உள்நாடு

சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார நிபுணர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

ஆறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்வதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல தடவைகள் தமது கோரிக்கைகளை உரிய தரப்பினருக்கு தெரிவித்தும் சுகாதார அதிகாரிகள் இதுவரையில் முறையான கலந்துரையாடலை நடத்தவில்லை என நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்வரும் 9ஆம் திகதி 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சுகாதார அதிகாரிகள் உரிய பதிலை வழங்காவிடின், தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க நேரிடும் எனவும் குறித்த ஒன்றியம் எச்சரிக்கின்றது.

Related posts

கடும் மழை காரணமாக பதுளை – எல்ல புகையிரத சேவைக்கு பாதிப்பு

editor

“நாம் 200” நிகழ்வு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் – ஜீவன் தொண்டமான் அழைப்பு.

அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது