விளையாட்டு

T20 பந்துவீச்சாளர் தரப்படுத்தல் பட்டியலில் வனிந்து ஹசரங்கவுக்கு முதலிடம்

(UTV | கொழும்பு) – சர்வதேச கிரிக்கெட் பேரவையில் (ஐசிசி) இருபதுக்கு 20 பந்துவீச்சாளர் தரப்படுத்தலுக்கான பட்டியலில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தரப்படுத்தலில் அவர் 776 புள்ளிகளை பெற்றுள்ளார்.

அதற்கமைய, இதுவரையில் குறித்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த தென் ஆபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷம்சி இரண்டாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அவர் 770 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

இப்பட்டியலில் 730 புள்ளிகளைப் பெற்று இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷீட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதனைவிட சர்வதேச கிரிக்கெட் பேரவையின், சகலதுறை வீரர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலில் வனிந்து ஹசரங்க நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தரப்படுத்தலில் அவர் 172 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், இந்த தரப்படுத்தல் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் மொஹமட் நபீ, 271 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

No description available.

No description available.

Related posts

தனிப்பட்ட காரணங்களுக்காக சமிந்த இராஜினாமா

லசித் மலிங்கா தேடி, புகழ்பெற்ற மொஹம்மெட் பைனாஸ் யார்?

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் பெயர் மாற்றம்