உள்நாடு

அரசுக்கான இறுதி எச்சரிக்கை இது – CEB

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள போராட்டம் இன்று (03) மதியம் 12 மணிக்கு கொழும்பில் உள்ள இலங்கை மின்சார சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெறவுள்ளது.

கெரவலப்பிட்டி யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்கு உரித்தான 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையை இரத்து செய்யுமாறு அழுத்தம் கொடுத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நாடு முழுவதும் உள்ள அனைத்து மின்சார சபை ஊழியர்களும் கொழும்பு நோக்கிப் பயணிப்பதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

“.. தற்போதைய நிலைமையை மேலும் சிக்கலுக்குள் உள்ளாக்க வேண்டாம்..”

நாட்டு மக்களுக்கு மின்சாரம் இருக்கின்ற நிலையில்தான், தாங்கள் கொழும்புக்கு வருவதற்குத் தீர்மானித்துள்ளதாக அதன் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

“.. அத்தியாவசிய மின்சாரத்தடை சீரமைப்பு பணிகள் இடம்பெறும். எனினும், மிகப்பெரிய மின்சார விநியோகத்தடை இடம்பெறுமாயின், அதனை வழமைக்குக் கொண்டுவர முடியாத நிலை ஏற்படும்.

இந்நிலையில், சுற்றறிக்கை வெளியிட்டு, அழுத்தம் கொடுத்து, அச்சுறுத்தி, இந்த உடன்படிக்கையை இரத்து செய்யாமல், பயணிக்க முயற்சித்தால், வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பை வெளியிட உள்ளோம்.

தேசிய பாதுகாப்புக்கு எதிரான உடன்படிக்கையை உடனடியாக மீளப்பெற வேண்டும்..” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில், நாட்டின் எந்தவொரு பகுதியிலும், இன்றும், நாளையும், மின்சார விநியோகத் தடையோ அல்லது இயற்கை காரணங்களால் ஏற்படும் மின்சாரத் தடையைச் சீர்செய்யாமலிருக்கும் நிலையோ ஏற்படமாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

இதோ அமெரிக்கா செல்லும் வாய்ப்பு

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை!

கடந்த 24 மணித்தியாலங்களில் 162 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு