(UTV | கொழும்பு) – சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாளை (01) முதல் மூன்றாவது தடுப்பூசி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் பணி நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இதன்போது சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத்துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்காக ஒரு மில்லியன் பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், வாரந்தோறும் 400,000 தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.