உள்நாடு

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

(UTV | கொழும்பு) –  அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, நேற்றுடன் (28) நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி வரையான 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி நியமிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்படுவது இது மூன்றாவது தடவையாகும்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின், இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனாவிலிருந்து 3,158 பேர் குணமடைந்தனர்

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண் கைது.

வெள்ள நிவாரணத்திற்கு பிரதமர் பணிப்பு