உலகம்

வர்த்தக நாமத்தை ‘Meta’ என மாற்றியமைத்தது ‘Facebook’ நிறுவனம்

(UTV | கலிபோர்னியா) – பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை மெட்டா ‘Meta’ என மாற்றியமைத்துள்ளது.

நேற்று(29) இடம்பெற்ற பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த இணைப்பு மாநாட்டில், அதன் இணை நிறுவுனர் மார்க் ஸக்கர்பெக், இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பெயர் மாற்றமானது, தமது தனிப்பட்ட தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ்அப் என்பனவற்றிற்கு பொருந்தாது என்றும், தாய் நிறுவனத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஊழியர் ஒருவரினால் கசிந்த ஆவணங்களின் அடிப்படையில், பேஸ்புக் தொடர்பில் எதிர்மறை தகவல்கள் வெளியான நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக பிரச்சினைகளுடன் போராடி, தாங்கள் அதிகமாகக் கற்றுக்கொண்டதாக மார்க் ஸக்கர்பெக் குறிப்பிட்டுள்ளார்.

கற்றுக்கொண்ட அனைத்தையும் கொண்டு புதிய அத்தியாயத்தை உருவாக்க வேண்டிய நேரம் இதுவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

சீன எல்லையில் தற்கொலைப் படையை நிறுத்த தலிபான்கள் திட்டம்

கொரோனாவைத் தொடர்ந்து கொங்கோவில் எபோலா ஆதிக்கம்

சூடானில் அவசர நிலை