விளையாட்டு

ஆஸியின் சவாலுக்கு மஹீஷ் தீக்ஷன தயார்

(UTV | கொழும்பு) – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன இணைத்துக் கொள்ளப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்த்தர் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

மஹீஷ் தீக்ஷனவுக்கு ஏற்பட்டிருந்த உபாதையிலிருந்து அவர் குணமடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் இணைத்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால் இன்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டு அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அணியினர் முயற்சிப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய 22 ஆவது போட்டி டுபாயில் இன்றிரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி!

நாணய சுழற்சியில் இலங்கைக்கு வெற்றி

தென் ஆப்பிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி