உள்நாடு

சுற்றுலாப் பயணிகளுக்கு எல்லவல நீர்வீழ்ச்சி தடை

(UTV | கொழும்பு) – வெல்லவாய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சிக்கு, மீள் அறிவித்தல் வரை சுற்றுலாப்பயணிகளுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த தந்தையும், அவரது இரண்டு பிள்ளைகளும், எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்றபோது உயிரிழந்தனர்.

இவ்வாறாக அண்மைக் காலமாக, எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்று 6 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காரணத்தைக் கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெல்லவாய சுற்றுச்சூழல் குழு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், எல்லவல நீர்வீழ்ச்சியைப் பார்வையிட, சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்குவதாக வெல்லவாய பிரதேச செயலாளர் சந்தன ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தவுக்கு பங்களாதேஷ் பிரதமரால் வரவேற்பு [PHOTOS]

வெலிசறை கடற்படை முகாம் இன்று முதல் வழமைக்கு

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் தடை நீடிப்பு!