(UTV | கொழும்பு) – சீன நிறுவனத்தின் சேதனப் பசளையை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் நிறுவனமொன்றுக்கு அனுப்பி மீள ஆய்விற்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ கொழும்பில் இன்று (26) நடைபெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள ஆய்வுக்கூடங்களில் முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என சீன நிறுவனம் தெரிவித்துள்ளதாக சஷீந்திர ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
எனினும், அவர்கள் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் வேண்டுகோளாகவே அதனை முன்வைத்ததாகவும், இரண்டு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு இடத்தில் உரத்தின் தரம் தொடர்பாக பரிசோதனை நடத்தலாம் என யோசனை முன்வைக்கப்பட்டு, அதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.