உள்நாடு

ஜனாதிபதியை சந்திக்கும் அதானி குழுமத்தின் தலைவர்

(UTV | கொழும்பு) – அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி திட்டம் குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மற்றும் புதுடெல்லியில் உள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கொள்காட்டி இந்த தகவலை ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட விஜயமான கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் நேற்று (24) இரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதேநேரம் இலங்கை வந்துள்ள அதானி, நாட்டின் உயர்மட்ட பிரமுகர்களுடனான சந்திப்புகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

700 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனைய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகக் கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

SLT பங்கு ஏலத்திற்கு தகுதி பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள்!

போதைப்பொருளுக்கு எதிரான திட்டத்திற்கு அழுத்தம் வழங்கும் அரசியல்வாதிகள்

கொவிட் 19 நிதியத்திற்கு 609 மில்லியன் ரூபாய் நன்கொடை