உள்நாடுவணிகம்

எகிறும் மரக்கறிகளின் விலைகள்

(UTV | கொழும்பு) – தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் வரும் மரக்கறிகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையினால் மரக்கறிகளின் விலைகள் 100 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர் கிறிஸ்டி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தம்புள்ள பொருளாதார மையம் நாட்டின் மரக்கறித் தேவையில் 70 சதவீதத்தை விநியோகிக்கிறது.

மேலும், மலையகப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மரக்கறிகளின் மொத்த விலை கிலோகிராம் ஒன்று 200 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

வடக்கு பிரதேச மரம் நடுகை விழா!

அரிசி விலையில் மீண்டும் உயர்வு

இலங்கையில் கொரோனா மரணங்களின் தகனம் தொடர்பில் அமெரிக்கா