விளையாட்டு

T20 WC : நமீபியாவை வீழ்த்திய இலங்கை

(UTV | ஓமான்) – டி-20 உலகக்கிண்ண தொடரின் முதல் சுற்றுப் (தகுதிகாண்) போட்டியில், இலங்கை அணி முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அபுதாபியில் நேற்று(18) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணியும் நமீபியா அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, 19.3 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக கிரைஜ் வில்லியம்ஸ் 29 ஓட்டங்களையும் ஜெராட் எரஸ்முஸ் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், மகேஷ் தீக்ஷன 3 விக்கெட்டுகளையும் லஹிரு குமார மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சமிக்க கருணாரத்ன மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 97 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 13.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பானுக ராஜபக்ஷ ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களையும் அவிஷ்க பெனார்டோ ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நமீபியா அணியின் பந்துவீச்சில், ரூபன் ட்ரம்பெல்மன், பெர்னாட் ஸ்கோல்டஸ் மற்றும் ஸ்மிட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை கிரிக்கெட் அணியின் மஹேஷ் தீக்ஷன தெரிவு செய்யப்பட்டார்.

Related posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த சென்னை…

அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர்

காலியில் புதிதாக இரண்டு கிரிக்கெட் மைதானம்-பிரதமர்