உள்நாடு

PANDORA PAPERS ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை

(UTV | கொழும்பு) – சர்ச்சைக்குரிய பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்தக்கட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், பல்வேறு தரப்பினர் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷவின் கணவர் திருக்குமரன் நடேசன், இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் நேற்று முன்னிலையானார்.

முற்பகல் 11 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், 2 மணிநேரத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

திருக்குமரன் நடேசன், பெண்டோரா ஆவணங்கள் தொடர்பில், கடந்த 8 ஆம் திகதி, முதல் முறையாகக் கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி, 3 மணிநேரம் வாக்குமூலம் வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் – சஜித் பிரேமதாச

editor

பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்கள் பிடியில்

PCR பரிசோதனையில் 101 பேருக்கு கொரோனா இல்லை