உள்நாடுவணிகம்

மண்ணெண்ணெய் அடுப்புக்கும் தட்டுப்பாடு

(UTV | கொழும்பு) –   புறக்கோட்டை உள்ளிட்ட பிரதான நகரங்களில் உள்ள வர்த்தக நிலையங்களில் மண்ணெண்ணெய் அடுப்புக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததையடுத்து, மண்ணெண்ணெய் அடுப்பைப் பொதுமக்கள் அதிகளவில் கொள்வனவு செய்கின்றமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சந்தையில் மண்ணெண்ணெய் அடுப்பின் விலை 1500 ரூபா முதல் 3,000 ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் அதிகளவில் மண்ணெண்ணெய் அடுப்பைக் கொள்வனவு செய்வதாக புறக்கோட்டை ஐக்கிய தேசிய சுயதொழில் சந்தை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் ஒரு தொகுதி நனோ நைட்ரஜன் திரவ உரம் இலங்கைக்கு

பாப்பரசரை சந்திக்கின்றார் கொழும்பு பேராயர் மல்கம்

பாயிஸ் முஸ்தபா தென்கிழக்கு பல்கலையின் வேந்தராக நியமனம்!