உள்நாடு

கொவிட் தொற்றுக்குள்ளாகும் அரச ஊழியர்களுக்கு இழப்பீடு

(UTV | கொழும்பு) –  கொவிட் தொற்றுக்கு உள்ளாகி வீடுகளிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு, அக்ரஹார காப்புறுதி நிதியத்தின் கீழ் இழப்பீடு வழங்கும் திட்டமொன்றை வகுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொழிற்சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இன்று(14) அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் மற்றும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி இழப்பீடு வழங்கல் முறைமையொன்றை, இவ்வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டம் மூலம் செயற்படுத்த அப்போதைய நிதியமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்திருந்தார்.

Related posts

விசேட அறிவிப்பை விடுத்த மத்திய வங்கி ஆளுநர்!

ஒரே நிகழ்விற்கு, 4 உலங்கு வானூர்த்தி : அரச பண முறைகேடு

பசில் மீளவும் இந்தியாவுக்கு