உள்நாடு

நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  சுகாதார நடைமுறைகளை மீறி திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதி கோரி நாளாந்தம் பெரும் எண்ணிக்கையிலான கோரிக்கைகள், சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, செயற்படுமாறும் உபுல் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், சுகாதார வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மேலதிகமாகத் திருமணங்கள் மற்றும் மரண வீடுகளில் பொதுமக்கள் ஒன்று கூடினால், அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

Related posts

மரக்கறிகளை ஏற்றிச்செல்ல சிறப்பு ரயில் சேவை

திட்டமிட்டவாறு உயர்தரப் பரீட்சை இடம்பெறும்

விமானங்களுக்கான தரையிறங்கல் – தரித்தல் கட்டண அறவீடு இல்லை