உள்நாடு

மகேந்திரன் இன்றி வழக்கை முன்னெடுக்க அனுமதியளிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

(UTV | கொழும்பு) –  தற்போது வெளிநாட்டில் உள்ளதாகக் கருதப்படும் மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான கார்திய புஞ்சிஹோ ஆகிய பிரதிவாதிகளின்றி மத்திய வங்கி பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதியளிக்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார்.

இந்த வழக்கு இன்று, நீதிபதிகளான சம்பா ஜானகி ராஜரத்ன, தமித் தொட்டவத்த மற்றும் நாமல் பலல்லே ஆகியோரடங்கிய ஆயத்தின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான அஜஹான் கார்திய புஞ்சிஹோ 2015 பெப்ரவரி மாதத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.a

Related posts

திரு. நடேசன் இன்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

புதிய பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஷ தெரிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நான்கு நீதியரசர்கள் நியமனம்.

editor