விளையாட்டு

IPL 2021 – பெங்களூர் அணிக்கு வெற்றி

(UTV | துபாய்) –   ஐ.பி.எல். ரி-20 தொடரின் 56ஆவது லீக் போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்ளூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், றோயல் செலஞ்சர்ஸ் பெங்ளூர் அணியும் டெல்லி கெபிடல்ஸ் அணியும் மோதின.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் செலஞ்சர்ஸ் பெங்ளூர் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெபிடல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரித்வீ ஷா 48 ஓட்டங்களையும் தாவன் 43 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பெங்களூர் அணியின் பந்துவீச்சில், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் சஹால், ஹர்சல் பட்டேல் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 165 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்ளூர் அணி, போட்டியை பரபரப்பாக நகர்த்தி இறுதி பந்தில் வெற்றி இலக்கை கடந்தது. இதனால் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரீகர் பாரத் ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களையும் க்ளென் மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

டெல்லி அணியின் பந்துவீச்சில், என்ரிச் நோட்ஜே 2 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 52 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 3 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஸ்ரீகர் பாரத் தெரிவுசெய்யப்பட்டார்.

Related posts

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு 240

கெய்ல், சமி, பிராவோ, அப்ரிடி LPL இல் இணைய தயார்