உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் பணியாற்றும் சிற்றூழியர்கள் , இன்று (08) காலை 7 மணியிலிருந்து 12.30 மணி வரை அடையாள போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

அந்தவகையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சிற்றூழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதாவது, இடை நிறுத்தப்பட்ட விசேட கொடுப்பனவான 7,500 ரூபாய் கொடுப்பனவை தொடர்ந்து வழங்க கோரியும் சீருடை கொடுப்பனவை அதிகரித்து வழங்கக் கோரியும் காணப்படுகின்ற ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரியும் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊழியர்களின் விடுப்பு அதிகரிக்க கோரியும் மேலதிக நேர கொடுப்பனவை அதிகரிக்க கோரியுமே இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

Related posts

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

மகிந்தவை ஏன் நேரில் சந்தித்தீர்கள் – கரி ஆனந்தசங்கரி அதிருப்தி

UTV நடாத்தும் குறுந்திரைப்படப் போட்டி – 2024 || UTV Short Film Competition 2024