உள்நாடு

ரிஷாத் சிறுநீர் கழிப்பது கூட போத்தலில் : ஏன் இந்த பழிவாங்கல்?

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் எவ்வித ஆதாரமும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதை நாம் கண்டிப்பதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்;

“பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் சிறைவாசம் குறித்து விளக்குவதாக சபாநாயகர் கடந்த அமர்வில் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் தங்கியிருக்கும் அறை மாலை 5 மணிக்கு மூடப்படுகின்றது. அதற்கு பின்னர் சிறுநீர் கழிப்பது கூட போத்தலில், இஸ்லாம் மத அடிப்படையில் அவர் இரவில் இரண்டு முறை வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். அதற்கு அவருக்கு தண்ணீர் தேவை. இது நியாயமற்றது.

இதுவே ஆளுங்கட்சி உறுப்பினராக இருந்தால், அவருக்கு வீட்டிலிருந்து சாப்பாடு கூட கொண்டு வந்து கொடுக்கபப்டுகின்றது. அனைத்துமே அரசியல் சூழ்ச்சிகள்.

அவ்வாறு தான் ரிஷாத் பதியுதீனின் மைத்துனர் ஒருவருக்கு எதிராக பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் அவர் பல வாரங்கள் சிறையில் இருந்தார். பின்னர் அப்பெண்ணின் மருத்துவ அறிக்கை வந்தபோது, ​​அந்த பெண் கன்னியாக இருந்தார்..” எனத் தெரிவித்திருந்தார்.

அதன் பிற்பாடு சபையில் சற்று அமைதியின்மை நிலவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

  • ஆர்.ரிஷ்மா

   

Related posts

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

பாடசாலை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு தடை – மகிந்த அமரவீர கோரிக்கை.

கடந்த 24 மணித்தியாலத்தில் 613 பேர் கைது