உள்நாடு

உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘Ever Ace’ கப்பல் கொழும்புக்கு

(UTV | கொழும்பு) – உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலாகக் கருதப்படும் எவர் ஏஸ் (Ever Ace) கப்பல் இன்று (06) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை நேரப்படி, நேற்றிரவு 11.04 அளவில் கொழும்பு துறைமுகத்தை, குறித்த கப்பல் வந்தடைந்ததாக, கப்பல் போக்குவரத்து தொடர்பான இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் 400 மீற்றர் நீளமும், 62 மீற்றர் அகலமும் கொண்டதுடன், 23,992 கொள்கலன்களைக் கொண்டுசெல்லும் திறன்கொண்டது.

எவர் கிரீன் (Evergreen) கப்பல் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தக் கப்பல், கடந்த ஜூலை மாதம் கொள்கலன் கையாள்கைக்கு இணைக்கப்பட்டது.

நெதர்லாந்தின் ரோடர்டேம் துறைமுகத்திலிருந்து, கடந்த மாதம் புறப்பட்ட குறித்த கப்பல், இன்று (06) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இது போன்ற பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளக்கூடிய 24 துறைமுகங்கள் உலகில் உள்ளன.

எனினும், தெற்காசியாவில் அந்தக் கப்பல் நங்கூரமிடக்கூடிய ஒரேயொரு துறைமுகம் கொழும்பு துறைமுகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    

Related posts

முகக்கவசம் அணியாத 1,214 பேர் சுயதனிமைப்படுத்தலில்

அனைத்து பௌத்த அறநெறிப் பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் நாட்களில் கடுமையான நடவடிக்கை