(UTV | கொழும்பு) – இந்திய சேதனப் பசளை இலங்கையில் பாவிக்க உகந்தது என ஆய்வுக்கூட பரிசோதனையில் உறுதியாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
உர தட்டுப்பாட்டினை நிவர்த்திப்பதற்காக இந்தியாவிலிருந்து விமானம் மூலமாகவேனும் உரத்தை கொண்டு வருவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண உரம் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு விவசாய அமைச்சர் பதிலளிக்கையில் இவ்விடயங்களை குறிப்பிட்டார்.