உள்நாடு

கடவுச்சீட்டு பெறுவோருக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாகக் குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரமே கடவுச் சீட்டுக்கள் வழங்கப்படும் எனக் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அவசர தேவைகளுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும் எனவும், அதற்காக குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் இணையத்தளம் ஊடாக, திகதியை முன்பதிவு செய்தபின் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அலுவலகத்திற்கு சென்று கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டார்.

அத்தகைய முன்பதிவு இல்லாத விண்ணப்பதாரிகள் அலுவலக வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

முன்பதிவுகளை செய்துக்கொள்ள பின்வரும் இணையத்தள முகவரிக்கு பிரவேசிக்க முடியும்.

Related posts

மனைவி, காதலி மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சொத்து – நிமால் சிறிபால டி சில்வா மீது முறைப்பாடு

editor

முன்னாள் பிரதமர் நாடாளுமன்றுக்கு வருகை

சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்களுக்கான ஒன்று கூடல்