(UTV | கொழும்பு) – இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா சற்றுமுன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.