உள்நாடு

இந்திய வெளிவிவகார செயலாளரின் விஜயம் இன்று

(UTV | கொழும்பு) – இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஸ்ரிங்லா இன்று(02) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிவிவகாரத்துறை செயலாளர் ஜயநாத் கொழம்பகேவின் அழைப்பிற்கமைய அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

Related posts

 பஸ், ரயில் டிக்கெட்களுக்கு பதிலாக இனி புதிய போக்குவரத்து அட்டை

இலங்கையில் நரிகள் ஆக்கிரமித்து வரும் கிராமம்

மேலும் 3 பேர் பூரண குணம்