உள்நாடு

ஊவா – தென் மாகாண பாடசாலைகளை திறக்க திட்டம்

(UTV | கொழும்பு) – ஊவா மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு குறைவான அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 18 ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மில் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துமாறு அனைத்து மாகாண கல்வி காரியாலயங்களுக்கும் அறிவித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

இதேவேளை, ​தென் மாகாணத்தில் 200 மாணவர்களை விட குறைவாக கொண்ட அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் 21 ஆம் திகதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் அமைந்துள்ள 514 பாடசாலைகள் இவ்வாறு மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இம்மாதம் 21 ஆம் திகதியளவில் 9 மாகாணத்திலும் 200 ஐ விட குறைந்த மாணவர்களை கொண்ட அனைத்து பாடசாலைகளையும் திறக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்பவுதாக தென் மாகாண ஆளுநர் விலி கமகே தெரிவித்தார்.

Related posts

4பேர் கொண்டவர்கள் வற் வரி எவ்வளவு செலுத்த வேண்டுமென தெரியுமா?

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பல அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்திய வர்த்தமானி வெளியீடு