உள்நாடு

கடமைகளை அலட்சியம் செய்ததாக குற்றச்சாட்டு

(UTV | கொழும்பு) – முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களின் போது தமது கடமைகளை அலட்சியம் செய்ததாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

குறித்த வழக்கு இன்று (01) கொழும்பு கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஊரடங்கு பகுதிகளில் இருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு

விளையாட்டுத்துறை வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் ஆராய 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு நியமனம்!