உள்நாடு

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 597 பேர் குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றில் இருந்து மேலும் 597 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 458,085 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 517,377 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,906 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மேலும் சில குற்றவாளிகளுக்கு பிணை

ஆசிரிய சேவைக்குப் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அறிவிப்பு!

சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor