உள்நாடு

வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கு அண்மித்தவாறு வளிமண்டல தளம்பல் நிலை உருவாகியுள்ளதால் இன்றும்(01) நாளையும், நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஓய்விலுள்ள மஹிந்தவை நலம் விசாரிக்கச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறைவு!!

வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் – மஹிந்தானந்த

ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பாக – கல்வி அமைச்சின் மகிழ்ச்சி தகவல்