உள்நாடுவணிகம்

மத்தள வரும் விமானங்களுக்கு சலுகை

(UTV | கொழும்பு) – மத்தள விமான நிலையத்திற்கு வரும் விமானங்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மத்தள சர்வதேச விமான நிலையத்தில் நேர அட்டவணைக்கு அமைய விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு விமானப் போக்குவரத்துக் நிறுவனங்களை கவர்தல் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

சர்வதேச விமானப் போக்குவரத்துக் நிறுவனங்களை குறித்த விமான நிலையத்திற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் தினத்திலிருந்து விமான நிலைய குடியகல்வு வரியை இரண்டு வருடங்களுக்கு முழுமையாக விடுவிப்பதற்கும் சுற்றுலாத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் 04 வருடங்களுக்கான சர்வதேச விமானங்கள் தரையிறக்கம் மற்றும் தரிப்புக் கட்டணங்களுக்கு விலையை குறைக்கவும் சுற்றுலாத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Related posts

“இறக்குமதி தடை முழுமையாக நீக்கம்” நிதி இராஜாங்க அமைச்சர்

IMF பிரதிநிதி குழு இன்று இலங்கைக்கு

ஷானி அபேசேகர விளக்கமறியலில்