உள்நாடு

ஒட்சிசன் கொள்வனவை இடைநிறுத்த அரசு உத்தரவு

(UTV | கொழும்பு) –  எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு தேவைப்படும் 1,080 டன் திரவ ஒட்சிசன் இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்வதற்கான உத்தரவை இடைநிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சகத்தின் செயலாளர் ஆர்.எம்.சமான் குசுமசிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஒக்ஸிஜன் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள கணிசமான சரிவை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்ஸிஜனைக்கொண்டு, இப்போது இலங்கை தமது தற்போதைய தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள் [VIDEO]

இன்றும் சில பகுதிகள் விடுவிப்பு

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் இராஜினாமா