உள்நாடு

பல்கலைக்கழகங்களை நவம்பர் மாதம் மீளவும் திறக்க எதிர்பார்ப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

20 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகளை அரசாங்கம் அடுத்த மாத இறுதிக்குள் நிறைவு செய்யுமாயின், எதிர்வரும் நவம்பர் மாதம் பல்கலைக்கழகங்களை மீள திறக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல வருடங்களுக்கு பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு 42,000 மாணவர்கள் தகுதிபெற்றுள்ளதாகவும் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை விபத்து ஒருவர் பலி!

டயனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரத்து செய்யப்படுமா??