விளையாட்டு

வார்னருக்கு இனி வாய்ப்பில்லை

(UTV | துபாய்) – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இந்த சீசனில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னருக்கு இனிமேல் களமிறங்க வாய்ப்புக் கிடைக்காது என பயிற்சியாளர் ட்ரீவோர் பேலிஸ் சூசகமாகத் தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் துடுப்பாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ஓட்டங்களை சேர்த்தது. 165 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் தொடர்ந்து 5 தோல்விகளைச் சந்தித்து வந்த சன்ரைசர்ஸ் அணி 2-வது வெற்றியைப் பெற்றுள்ளது. ப்ளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு சன்ரைசர்ஸ் அணிக்கு முடிந்துவிட்டது என்றாலும், இன்னும் அந்த அணிக்கு 4 போட்டிகள் உள்ளன.

அடுத்துவரும் 4 போட்டிகளும் வலுவான அணிகளுக்கு எதிரானது என்பதால், வெல்வது கடினம். ஆதலால், இனிவரும் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணியில் உள்ள இளம் வீரர்கள், ஒரு போட்டியில்கூட களமிறங்காத வீரர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் திறமையை பரிசீலிக்கத் திட்டமிட்டுள்ளது.

Related posts

பிரபல கிரிக்கெட் வீரர் விபத்தில் உயிரிழப்பு

விம்பிள்டன் பட்டத்தை 8-வது முறையாக கைப்பற்றி பெடரர் சாதனை!!

‘இப்போதைக்கு இந்தியாவில் வாய்ப்பில்லை’