(UTV | கொழும்பு) – எட்டு கோரிக்கைகளை முன்வைத்து 44 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(27) அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளன.
அதன்படி, இன்று காலை 7:00 மணி முதல் 5 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் முதல் வழங்கப்பட்ட 7,500 ரூபாய் கோவிட் -19 கொடுப்பனவு நிறுத்தம் உட்பட சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் 8 பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக் கோரியே இந்த வேலை நிறுத்தம் இடம்பெறவுள்ளது.