உள்நாடு

வர்த்தகர்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை திருத்தச்சட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சில பொருட்களுக்கு நிர்ணய விலையினை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தனிநபர் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச உத்தியோகத்தர்களை தனியார் துறைக்கு அனுப்புவது தொடர்பில் கவனம்

ஶ்ரீ.சு.க தலைவராக மீளவும் முன்னாள் ஜனாதிபதி

பட்டதாரிகளுக்கான பயிற்சித்திட்டம் இன்று ஆரம்பம்