(UTV | கொழும்பு) – கெரவலப்பிட்டி மின்நிலையத்தில் எரிவாயு குழாய் அமைப்பு மற்றும் களஞ்சியத்தொகுதி நிர்மாணம் என்பன கேள்வி பத்திரம் இன்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஆளும் கட்சியினது பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இன்று கலந்துரையாடவுள்ளனர்.
அண்மையில் வெளியான சர்ச்சைக்குரிய கருத்துக்களை மையப்படுத்தி இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
முன்னதாக நேற்றைய தினம் குறித்த சந்திப்பு இடம்பெறவிருந்தது.
எனினும், இன்று பிற்பகல் வரை இந்த சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் 4.30 மணியளவில் ஆளும் கட்சியினது பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதமருக்கிடையேயான சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.