(UTV | கொழும்பு) – தரம் 5 மற்றும் 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டல்கள் கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமான வைத்தியர். அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பான முடிவை கல்வி அமைச்சு அறிவிக்கும். தரம் 5 மற்றும் அதற்குக் கீழ் உள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு வழிகாட்டல் நெறிமுறைகளை வழங்க வேண்டும்.
அத்துடன் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து கல்வி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் முடிவு எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை முழுமையான தடுப்பூசி போட்டாலும் இல்லாவிட்டாலும் பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.