(UTV | கொழும்பு) – அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
கெரவலப்பிட்டி மின்நிலையத்தின் எரிவாயு குழாய் கட்டமைப்பு மற்றும் களஞ்சியசாலை தொகுதி நிர்மாணப் பணிகளை விலைமனுக்கோரலின்றி அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில், இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.